Available Language:
Tamil /English /Hindi
/Malayalam /Telugu /Kannada
📥Download &Read Sample
📙 Tamil
📙 English
📙 Hindi
📙 Malayalam
📙 Telugu
📙 Kannada
- Features
Description
of the concept behind Pancha Pakshi Shastra
Favourable
Colours and Directions
Predictions
based on Panch Pakshi
- Detailed Features
Description
of the concept behind Pancha Pakshi Shastra
Pancha
Pakshi Shastra is based on ancient Tamil literature. Pancha means Five and
Pakshi means Bird. The Panch Pakshi system has some resemblance to the
Panchabhuta (Five elements) system of Vedic Astrology. It is believed that the
Five Elements represented by five birds, influence and control all the actions
of human beings. Astro-Vision PanchaPakshi software provides the birth star,
Birth paksha, and Nakshatra Pakshi . It also indicates the activity of the Main
Bird at a given point of time and the activity of the Sub-Bird at that
particular time. The relationship between them indicates whether the time will
be beneficial and lucky for the person or not.
- Favourable Colours and Directions
The
corresponding colours, directions, ruling days, death days, vowels and
friendship between the birds are also given in Astro-Vision PanchaPakshi
software.
- Predictions based on Panch Pakshi
A detailed
chart as well as a summary chart is provided, which includes the activities of
the Apahara Birds for each day of the week for the two Pakshas. The suitability
of the time for performing important activities is also given.
Report only Sent to Your Email After payment conformation...
1) Name :
2) Parent Name :
3) Gender : Male / Female
4) Time of birth : am /pm
5) City Of Birth :
6) Langugae :
Tamil /English /Hindi /Malayalam /Telugu /Kannada
(Any Onle Language)
8) Your Mail Id :
9) Contact Number :
If you wish to pay, follow the payment method above and pay according to your required astrological report and then send your details in the Astro Report (Astro Report) will be sent to you by email within 24 hours.
பட்சி தெரிந்தவனிடம் பகை கொள்ளாதே என்பது முதுமொழி. இந்த சாஸ்திரம் தெரிந்தவரை பகைத்துக் கொண்டால் தன் மீது பகை கொண்டவரை வீழ்த்தும் வல்லமை அவர்களுக்கு இருக்கும். அவ்வளவு சக்தி வாய்ந்தது. இதை யாரும் தீய காரியத்திற்கு பயன்படுத்த வேண்டாம் என மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அதே நேரத்தில் அரைகுறையாகப் புரிந்துக் கொண்டு சோதனை செய்து தனக்குத் தானே பிரச்சினையைத் தேடிக்கொள்ளாதீர்கள்.
ஒருவரின் நட்சத்திரத்தின் மூலம் பட்சியை நிர்ணயிக்கலாம். இது நட்சத்திரப் பட்சி எனப்படும். அவை கீழ் கண்டவாறு:-
வல்லூறு
அஷ்வினி,பரணி,கார்த்திகை,ரோகிணி,மிருகசீரிஷம்
ஆந்தை
திருவாதிரை,புனர்பூசம்,பூசம்,ஆயில்யம்,மகம்,பூரம்
காகம்
உத்தரம்,ஹஸ்தம்,சித்திரை,சுவாதி,விசாகம்
கோழி
அனுஷம்,கேட்டை,மூலம்,பூராடம்,உத்ராடம்
மயில்
திருவோணம்,அவிட்டம்,சதயம்,பூரட்டாதி,உத்ரட்டாதி,ரேவதி
இதுதான் பரவலாக பயன்படுத்தப் பட்டு வருகிறது. நட்சத்திரம் தெரியாதவர்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து தங்களுடைய (அல்லது பிறருடைய) பட்சிகளை முடிவு செய்யலாம். இவை அட்சரப் பட்சிகள் எனப்படும்.
ஒருவர் தொழில் நிமித்தமாகவோ வேறு எதற்காகவேனும் தங்களுடைய பட்சியின் நிலையறிந்து செயல்பட்டால் அதில் வெற்றி நிச்சயம் பெறலாம். இந்த பட்சிகளின் தொழில்கள் என்று அரசு, ஊண், நடை, துயில், சாவு என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலைகளில் பட்சிகளின் பலம் கீழ் கண்டவாறு இருக்கும் என்று சொல்லலாம்.
அரசு - 100% பலம்
ஊண் - 80% “
நடை - 50% “
துயில் - 25% “
சாவு - 0% “
ஒவ்வொரு பட்சிக்கு பகல்/இரவு நேரம் 5 பிரிவாக பிரிக்கப் பட்டு அந்த நேரத்தில் மேற்கண்ட எந்த நிலையில் இருக்கிறது என்று சொல்லப் பட்டிருக்கிறது.
இது தவிர இந்த பட்சிகளுக்கு மிகவும் பலவீனமான நாட்கள் (செயல் இழந்து விடும் நாட்கள் - Death Days) என்று இருக்கிறது. இவை படுபட்சி நாட்கள் எனப்படும். இந்த நாட்களில் எந்த முக்கியமான வேலை, புது முயற்சி, சுப காரியம், பிரயாணம், மிகவும் Risk ஆன ஆப்பரேஷன், மருத்துவ சிகிச்சை இவை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. இவை பகல், இரவு இரண்டு வேளைகளுக்கும் பொருந்தும்.
பட்சிகளின் பொதுவான பல நிர்னயங்களைப் பார்ப்போம். பட்சிகளின் பலம் இறங்குமுகமாக கீழ் கண்டவாறு:
1) காகம்
2) ஆந்தை
3) வல்லூறு
4) கோழி
5) மயில்
அதாவது காகம் எல்லாவற்றிலும் பலமிக்கது என்றும் மயில் மிகவும் பலவீனமானது என்று இதன் மூலம் முடிவுக்கு வரலாம்.
இது எதற்கு என்றால் உங்களது பட்சி மயில் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் பட்சியை விட பலமான ஆந்தை, காகம் இவற்றைத் தங்களது பட்சியாகக் கொண்டுள்ளவர்களுடன் நீங்கள் போட்டி போட்டு ஜெயிப்பது கடினம். ஆனால் பலவீனமான உங்கள் பட்சிக்கு ஊண் பட்சி நாட்களாக இருந்து, எதிராளியின் பட்சி படு பட்சியாக இருந்தால் உங்களுக்குதான் வெற்றி. இதை தற்காப்புக்காக பயன் படுத்தலாம் என்பதற்காகச் சொல்கிறேன். பிறருக்கு தீங்கு செய்வதற்காக அல்ல.
அந்த கால கட்டத்தில் எதிராளிக்கு பில்லி, சூனியம், ஏவல் செய்பவர்கள், அல்லது ஏதாவது ஒரு வகையில் கெடுதல் செய்ய நினைப்பவர்கள், பஞ்ச பட்சி தெரிந்தவர்களிடம் கேட்டு தனக்கு ஊண் பட்சி நாளும், எதிராளிக்கு படு பட்சி வரும்படி பார்த்துக் கொள்வார்கள். அல்லது பஞ்ச பட்சி தெரிந்தவர்கள் தங்களை நாடி வருபவர்களிடம் இந்த நாட்களைத் தேர்ந்தெடுத்து சொல்வார்கள். தீமைக்கு மட்டுமல்ல. நல்ல காரியங்களுக்கும் பயன்படுத்தலாம். பயன்படுத்த வேண்டும்.
தனக்கு சாதகமாக காரியம் சாதித்துக் கொள்ள நினைப்பவர்கள், (வீண், வம்பு, வழக்கு என்று மாட்டிக் கொண்டவர்கள், அதிகாரிகளைச் சந்தித்து உதவி கேட்க நினைப்பவர்கள்) இந்த பட்சியின் நிலையறிந்து நடந்தால் நன்மை அடையலாம். ஊண் பட்சி நாட்களில் வேலைக்கு மனு செய்தால் சாதகமான பதிலை எதிர் பார்க்கலாம்.
படு பட்சி நாட்கள் என்பது மிகவும் மோசமான பலன்களைக் கொடுக்கக் கூடியது என்று பார்த்தோம். இதனுடைய கொடிய பலன்களிலிருந்து தப்பிக்க ஒரு பரிகாரம் சொல்லியிருக்கிறார்கள். ஓம் நமசிவய என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபம் செய்து விட்டு சென்றால் அதன் கடுமை குறையும் என்று. (இதை மசிவயந, சிவயநம, நசிவயம என்று 125 வகையில் மாற்றி சொல்லலாம். பலன் ஒன்றுதான்.) ஆயினும் முழுமையாக படு பட்சி நாளின் கடுமையை கட்டுப்படுத்தி விட முடியாது என்பது என் கருத்து.
நாளும் கோளும் சிவனடியார்களை ஒன்றும் செய்து விட முடியாது என்று கோளறு திருப்பதிகத்தைப் பாடி தன் பயணத்தைத் தொடர்ந்த திருஞானசம்பந்தரே அதன் பிடியில் இருந்து தப்ப முடியாமல் போய் விட்டது. நாமெல்லாம் எம்மாத்திரம்.
பறவைகள் ஐந்து. அதன் தொழில்கள் ஐந்து என்று ஏற்கனவே பார்த்தோம். எந்த பறவை எந்த நாளில் எந்த நேரத்தில் என்ன தொழில் செய்யும் என்று பார்ப்போம். ஒரு நாளில் மொத்தம் 24 மணி = 60 நாளிகை. பகல் = 30 நாளிகை, இரவு = 30 நாளிகை. அது ஐந்து பறவைகளுக்கும் ஐந்து பிரிவாக பிரிக்கப்பட்டு பகல் (அல்லது இரவில்) தன் தொழிலைச் செய்ய ஒவ்வொரு பறவையும் 6 நாழிகைகள் எடுத்துக் கொள்ளும். 6 நாழிகைகள் என்பது 2 மணி 24 நிமிடங்கள். முதல் 6 நாழிகை ஊண் என்றால் அடுத்த 6 நாழிகை நடை அல்லது வேறு ஒரு தொழில் என்று வரும்.
உண்மையில் உற்றுக் கவனித்தீர்களானால் வளர் பிறை பகல் தொழில் முறையே ஊண், நடை, அரசு, துயில், சாவு என்று வரும். இரவு ஊண், அரசு, சாவு, நடை, துயில் என்று வரும். அதே போல் தேய்பிறை பகல் ஊண், சாவு, துயில், அரசு, நடை என்றும் இரவில் ஊண், துயில், நடை, சாவு, அரசு என்ற இந்த வரிசையில் வரும். எல்லா பட்சிகளுக்கும் வளர்/தேய் பிறைகளில் ஞாயிறு செவ்வாய், ஒரே மாதிரியான தொழில் இருக்கும். வளர் பிறைகளில் திங்கள், புதன் தேய்பிறைகளில் திங்கள், சனி, பட்சிகளின் தொழில் ஒரே மாதிரி இருக்கும். மற்ற கிழமைகளில் அந்தந்த கிழமைக்கு தகுந்தாற்போல் மாறி வரும்.
அதிகம் குழப்ப விரும்பவில்லை. கீழே ஒரு அட்டவணை தந்திருக்கிறேன் அதைப் பார்த்துக் கொள்ளுங்கள். சூரிய உதயம் காலை 6 மணி என்ற நிலையில் இதைத் தந்திருக்கிறேன். நீங்கள் இருக்கும் நாட்டில் சூரிய உதயம் 6.30 மணி என்றால் அந்த நேரத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.
நட்பு பட்சியாக உள்ளவர்களுடன் கூட்டு சேர்வது நன்மை பயக்கும். பகை உள்ளவர்களிடம் சற்று தள்ளியே இருப்பது நல்லது.
“அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உள்ளது” என்பது சித்தர்களின் வாக்கு. பிரபஞ்சமானது பஞ்ச பூதங்களாலானது என்பதை சித்தர்கள் கண்டறிந்தார்கள். அது போல் மனித உடலானது பஞ்ச பூதங்களாலானது என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர்.
ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரனுக்கு உடல் காரகன்,மனோக்காரகன் என்று பெயர்.மனித உடலிலும்,மனதிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு சந்திரனின் சுழற்சியே காரணம் என்பதை சித்தர்கள் கண்டறிந்தார்கள்.மனிதர்களின் உடற்கூறு அவர்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்திற்கு தகுந்தாற்போல் அமைந்தூள்ளது என்பதையும் கண்டறிந்தார்கள். உடலை இயக்குவது உயிர் காந்த ஆற்றலாகும். அந்த உயிர் காந்த ஆற்றாலானது சந்திரனினின் சுழற்சிக்கு தகுந்தார்போல் சில நேரங்களில் வலிமையடைவதையும்,சில நேரங்களில் வலுவிழந்துபோவதையும் கண்டறிந்தார்கள்.
உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமையாக இருக்கும்போது, எண்ணிய எண்ணங்கள் எளிதில் நிறைவேறுவதையும், உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமை குன்றியிருக்கும்போது, எண்ணிய எண்ணங்கள் நடைபெறாமல் தடைபடுவதையும் அனுபவத்தில் கண்டறிந்தார்கள்.
உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமையாக இருக்கும்போது, உடல் வலிமை,மனவலிமை கூடுவதையும், உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமை குன்றியிருக்கும்போது, உடல் வலிமை,மனவலிமை குறைவதையும் அனுபவத்தில் கண்டறிந்தார்கள். உடலில் ஏற்படும் இத்தகை மாற்றங்கள் ஒரு குறிப்பிட்ட கால சுழற்சியில் இயங்குகிறது என்பதையும்,அந்த கால சுழற்சிக்குத்தகுந்தார் போல் செயல்பட்டால் வாழ்க்கையில் எப்பொழுதும் வெற்றி நடை போடலாம் என்பதையும் மானிடர்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு அதை பஞ்ச பட்சி சாஸ்திரம் என்னும் தலைப்பில் உலகுக்கு வெளிப்படுத்தினார்கள்.
“பஞ்ச”என்றால் “ஐந்து” என்று பொருள். “பட்சி” என்றால் “பறவை” என்று பொருள். “சாஸ்திரம்” என்றால் “எழுதப்பட்டவைகளை செயல்படுத்திப்பார்த்தால் உண்மை விளங்கும்” என்று பொருள்.
பஞ்ச பட்சிகள் என்பவை வல்லூறு,ஆந்தை,காகம்,கோழி,மயில் ஆகிய ஐந்து பறவைகளாகும்.
பஞ்ச பட்சி சாஸ்திரத்தில் ஜென்ம நட்சத்திரம் தெரிந்தவர்களுக்கு ஜென்ம நட்சத்திர அடிப்படையிலும், ஜென்ம நட்சத்திரம்தெரியாதவர்களுக்கு அவரவர்களுடைய பெயரின் முதல் எழுத்தில் அமைந்துள்ள உயிர் எழுத்தின் அடிப்படையிலும் பட்சி நிர்ணயம் செய்யப்படுகிறது.
பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் உதவியுடன் கீழ்கண்ட காரியங்களை செய்யலாம்.
1) உடலிலிருந்து நோய் நீக்குதல்
2) பிறர் உடலில் நோயை உண்டாக்குதல்
3)மனோவிகாரங்களிலிருந்துதன்னை தற்காத்துக்கொள்தல்
4) பிறர் மனதை கட்டுப்படுத்துதல்
5) எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்தல்
6) பிறர் எண்ணங்கள் நிறைவேறாமல் தடுத்தல்
7) போட்டிகளில் வெற்றியடைதல்
8) எதிரிகளை வெல்லுதல்
9) தாம்பத்தியஉறவில் பெண்ணை திருப்திபடுத்துதல்
10) ஆருட பலன் கூறுதல்
11) கிரக தோசங்களுக்கு பரிகாரம் செய்தல்
12) சுப காரியங்களுக்கு நல்ல நேரம் தேர்ந்தெடுத்தல்
13) வர்மம் நீக்குதல்,வர்மத்தால் எதிரிகளைதாக்குதல்
நீங்கள் கட்டணம் செலுத்த விரும்பினால் மேலே உள்ள கட்டணம் செலுத்தும் முறையை பின்பற்றி உங்களுக்கு தேவையான ஜோதிட அறிக்கைக்கு ஏற்றவாறு கட்டணம் செலுத்திவிட்டு பின் இமெயிலில் உங்களுடைய விவரங்களை அனுப்பி வைத்தால் , உங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் ஜோதிட அறிக்கை(Astro Report) இமெயிலில் அனுப்பி வைக்கப்படும்.
நீங்கள் கட்டணம் செலுத்த விரும்பினால் மேலே உள்ள கட்டணம் செலுத்தும் முறையை பின்பற்றி உங்களுக்கு தேவையான ஜோதிட அறிக்கைக்கு ஏற்றவாறு கட்டணம் செலுத்திவிட்டு பின் இமெயிலில் உங்களுடைய விவரங்களை அனுப்பி வைத்தால் , உங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் ஜோதிட அறிக்கை(Astro Report) இமெயிலில் அனுப்பி வைக்கப்படும்.
0 Reviews:
Post Your Review
Your comments are very important to us. Post good comments. Your comments should not be detrimental to our growth and the well-being of others. Thank you for visiting this website. Come back.